விவசாயி வீட்டில் ரூ.2½ லட்சம் நகை திருட்டு

குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி வீட்டில் ரூ.2½ லட்சம் நகை திருடுபோனது.

Update: 2022-05-29 19:36 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 62), விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 20-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்