மருந்தகத்தில் ரூ.2 லட்சம் மோசடி; பெண் ஊழியர் மீது வழக்கு
மருந்தகத்தில் ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் மருந்தகம் நடத்தி வருபவர் ஹரிஹரன் (வயது 42). இவரது கடையில் காமராஜபுரத்தை சேர்ந்த ரேகா கடந்த 3 ஆண்டுகளாக கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடையில் கணக்குகளை ஹரிஹரன் தணிக்கை செய்தார். அப்போது மருந்துகள் வாங்காமலேயே வாங்கியதாக போலி பில்கள் தயாரித்து ரேகா ரூ.2 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை டவுன் போலீசில் ஹரிஹரன் புகார் அளித்தார். அதன்பேரில் ரேகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.