கடலூரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-09-03 14:39 GMT

கோப்புப்படம் 

சென்னை,

கடலூர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் நேற்று (2-9-2023) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், த/பெ. மகேந்திரன் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உயிரிழந்த சக்திவேலின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்திரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்