ஓடும் பஸ்சில்பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் பஸ்சில் பயணம்
விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாவாசை மனைவி கீதா (வயது 38). இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்தார்.
இந்நிலையில் இவர், மகளிர் குழுவின் பணமான ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 200-ஐ வங்கியில் செலுத்துவதற்காக அயினம்பாளையத்தில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் விழுப்புரத்திற்கு பயணம் செய்தார்.
பெண்ணிடம் பணம் அபேஸ்
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே பஸ் வந்து நின்றதும் அதிலிருந்து கீதா, கீழே இறங்கி பார்த்தார். அப்போது தான் வைத்திருந்த பையினுள் இருந்த பணம் மற்றும் 4 வங்கி கணக்கு புத்தகங்களும் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் அவர் தேடிப்பார்த்தும் பணமும், வங்கி கணக்கு புத்தகமும் கிடைக்கவில்லை. பஸ்சில் இருந்த கூட்டநெரிசலில் யாரோ மர்ம நபர், கீதா வைத்திருந்த பையில் இருந்த பணத்தையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் நைசாக அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
பணத்தை பறிகொடுத்த கீதா, இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.