திருச்சி விமான நிலையத்தில் ரூ.19.12 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.19.12 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. அப்போது விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்து போது, பெண்களுக்கான கைப்பையில் மறைத்து ரூ.19.12 லட்சம் மதிப்பிலான 318 கிராம் குச்சி வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்