வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-19 18:45 GMT

கோவை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவன இயக்குனர்

கோவை இருகூர் அருகே ஏ.ஜி.புதூரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டதாரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத் தில் வேலை செய்து வந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு கோவை வந்தார்.

இந்த நிலையில் சந்திரமோகன் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பினார். அப்போது, கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவன இயக்குனராக அருண் (40), அவரது மனைவி ஹேமலதா (36) ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டு வேலை

இதனால் அந்த தம்பதியை அணுகிய சந்திரமோகன், வெளி நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் போலந்து நாட்டில் கணினி தொடர்பான வேலை உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.4½லட்சம் செலவாகும் என்றும் கூறினர்.

இதையடுத்து அவர்கள் முன்பணமாக சந்திர மோகனிடம் ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் 2 ஆண்டு கடந்தும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் கவலை அடைந்த சந்திரமோகன் வேலை வாங்கி கொடுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

ரூ.19 லட்சம் மோசடி

ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து மிரட்டி னர். இது குறித்து சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். ஹேமலதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில்,வெளி நாட்டில் வேலை வாங்கி தரு வதாக கும்பகோணத்தை சேர்ந்த அமுதவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சம், அரியலூரை சேர்ந்த புகழேந்தியிடம் ரூ.3.18 லட்சம் என 7 பேரிடம் மொத்தம் ரூ.19 லட்சத்து 22 ஆயிரத்தை அருண், ஹேமலதா ஆகியோர் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்