வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம்- செல்போன் பறிப்பு

விராலிமலை அருகே வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம்- செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-08-30 18:35 GMT

வியாபாரி

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (வயது 50). வியாபாரியான இவர், தனது ஆட்டோவில் பல்வேறு ஊர்களுக்கு சென்று பழைய பொருட்களை விலைக்கு வாங்கி அதை மொத்தமாக விற்று வரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பழைய பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே உள்ள மேலபச்சகுடி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் முஜிபூர் ரகுமானிடம் தங்களிடம் பழைய பேட்டரி இருப்பதாக கூறி அதை வந்து வாங்கிக் கொள்ளுமாறு அவரை மேலபச்சகுடி சாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ரூ.15 ஆயிரம் பறிப்பு

இதைத்தொடர்ந்து அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்த போது அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து முஜிபூர் ரகுமான் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்