போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம்

திருப்பத்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம்;

Update: 2022-07-09 18:34 GMT

பஸ், லாரி மற்றும் மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை ஆண்டு தோறும் புதுப்பித்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து காட்டி வாகனம் புதுப்பிக்கப்பட்டதற்கான சான்றிதழ் பெறுவது அவசியம்.

இந்த நிலையில் சான்றிதழ் பெறாமல் இயக்கப்பட்ட 30 வாகனங்களுக்கு திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.கே. காளியப்பன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. விஜயகுமார் நேரடியாக சென்று பிடித்து அபராதம் விதித்தார்.

மேலும் அதிவேகமாக ஓட்டியது, அதிக பாரம் ஏற்றியது, உரிமம் இல்லாமல் இயங்கியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 97 வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 500 அபராதமும், வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.15 லட்சத்து 16 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகபாரம் ஏற்றிவந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோன்று ஏர்ஹாரன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்