சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயிலில் ஓசியில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் வசூல்

சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயிலில் ஓசியில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2022-10-26 21:03 GMT

சூரமங்கலம்:

சேலம்ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்பவர்களை தடுக்கும் வகையில் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் உத்தரவின் பேரில் டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர், இதையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது,

அப்போது டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், மேலும் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் அளவைவிட அதிகமாக கொண்டு சென்றது என 18 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது ரெயில்வே சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்து ரூ.1 கோடியே 41 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது,

Tags:    

மேலும் செய்திகள்