தனியார் நிறுவனத்தில் ரூ.௧௩ லட்சம் மோசடி

தனியார் நிறுவனத்தில் ரூ.13½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-16 16:23 GMT


கோவை செல்வபுரம்- பேரூர் மெயின் ரோட்டில் ஜி.சி.வி.நகரில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு வருடாந்திர வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது ரூ.13 லட்சத்து 69 ஆயிரத்து 812 மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் சரத்குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஹரிஷ் கோகுல், பிரபாகரன் ஆகியோர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்