40 பவுன் நகைகளை மீட்டு மறுஅடகு வைப்பதாக ரூ.12 லட்சம் மோசடி

40 பவுன் நகைகளை மீட்டு மறுஅடகு வைப்பதாக ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-07 21:17 GMT

திருச்சி கருமண்டபத்தில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருபவர் பிரான்சிஸ் சேவியர்(வயது 27). இந்த நிறுவனத்தில் இனியானூரை சேர்ந்த காயத்ரி(39) வாடிக்கையாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய 40 பவுன் நகைகளை கே.கே.நகர் சுந்தர்நகரில் சுதா (27) என்பவர் நடத்தி வந்த எம்.எஸ்.நிதி நிறுவனத்தில் அடகு வைத்து இருந்தார்.இந்த நகைகளை மீட்டு மறுஅடகு வைக்க நினைத்த காயத்ரி, முத்தூட் பைனான்சில் ரூ.12 லட்சத்தை கடனாக பெற்றார். அந்த பணத்தை சுதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும், காயத்ரி அடகு வைத்த அவரது நகைகளை முத்தூட் பைனான்சில் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து முத்தூட் பைனான்ஸ் நிறுவன மேலாளர் பிரான்சிஸ் சேவியர் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காயத்ரி, சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்