மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி புகார்-விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் கைது

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாரதீய ஜனதா விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-15 18:45 GMT

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாரதீய ஜனதா விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

ரூ.11 லட்சம்

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சுரேஷ்குமார். மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன்(வயது 49). இவர்கள் 2 பேரும், சிவகாசி நகர பா.ஜ.க. துணை தலைவராக இருக்கும் சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த பாண்டியன்(60) என்பவரிடம் அவரது இரண்டு மகன்களுக்கும் ெரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினாராம்.

இதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் ஆகிய 2 பேரும், இரண்டு தவணைகளாக பாண்டியனிடம் ரூ.7 லட்சம் பெற்றதுடன், மதுரையைச் சேர்ந்த மாநில பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் மூலம் வேலை வாங்கி தருவதாக அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

துறைமுகத்தில் வேலை

ஆனால் வேலை கிடைக்காததால் பாண்டியன், சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, அவர் ெரயில்வே துறையில் வழக்கு இருப்பதால் தாமதமாவதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினாராம்.

துறைமுகத்தில் வேலை பெறுவதற்கு முதல் தவணையாக கடந்த 2018-ல் ரூ.2 லட்சமும், அதன் பின்னர் தூத்துக்குடிக்கு பாண்டியனையும், அவரது மகனையும் அழைத்து சென்று அங்கு வைத்து ரூ.2 லட்சத்தை சுரேஷ்குமாரும், கலையரசனும் பெற்றதாகவும் கூறுகிறார்கள். இதையடுத்து பாண்டியன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் முதல்-அமைச்சர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோருக்கு புகார் அனுப்பினார்.

கைது

இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார், வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ்குமார், கலையரசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கலையரசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்