திண்டிவனம் அருகே வாகனத்தை மோதவிட்டு டாஸ்மாக் கடை ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிப்பு

திண்டிவனம் அருகே வாகனத்தை மோத விட்டு டாஸ்மாக் கடை ஊழியரிடம் ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-10 17:08 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த கொந்தமூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் சாரம் - ஈச்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷ் விற்பனையான பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரமேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் ரமேஷ், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து ரமேசிடம் இருந்த பணம், டாஸ்மாக் கடை சாவி, அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை அந்த 2 மர்மநபர்கள் பறித்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரமேஷ் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் சாவியை மர்ம நபர்கள் எடுத்து சென்றதால் அந்த கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்