ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்; 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்; 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இதுகுறித்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்