மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேஸ்வரம்,
தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி வடக்கு பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சூறைக்காற்று வீசி வருகின்றது.
இதனால் அப்பகுதியில் உள்ள மீன இறங்கு தளம் பாலம் மீது ராட்சத அலைகள் மோதுகின்றது. கடல் மிகவும் சீற்றமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளதால் எப்போது பரபரப்பாக காணப்படும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.