அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே மலைபட்டியில் பட்டம் புதூர் சாலையில் உள்ள தனியார் கல்குவாரி கிடங்கில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக தாலுகா போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கூத்திப்பாறை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ெகாடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.