அழுகியநிலையில் ஆண் பிணம்

முருகன்குன்றம் அருகே அழுகியநிலையில் ஆண் பிணம்;

Update: 2022-11-09 21:05 GMT

தென்தாமரைகுளம், 

கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றம் பகுதியில் முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் இருந்தவர்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முட்புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் பெயர் மற்றும் ஊர் விவரம் என்னவென்று தெரியவில்லை. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்