அழுகிய நிலையில் வெள்ளாற்றில் ஆண் பிணம்

அழுகிய நிலையில் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது.;

Update: 2023-04-25 18:45 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்