ரோட்டரி சங்க 32-வது பணியேற்பு விழா
வேதாரண்யம் ரோட்டரி சங்க 32-வது பணியேற்பு விழா
வேதாரண்யம்:
வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் 32-வது பணியேற்பு விழா தலைவர் ரகுநாதன் தலைமையில் நடந்தது. செயலர் மோகன் அறிக்கையை வாசித்தார். புதிய தலைவராக கார்த்திகேயன், செயலாளராக ராஜகுமார், பொருளாளராக அம்பாள் ஜெயச்சந்திரன் உள்பட சங்க இயக்குனா்கள் பொறுப்பேற்று கொண்டனர். புதிய பொறுப்பாளர்களை ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் மணி, பணியில் அமர்த்தி வைத்து சிறப்புரையாற்றினார். சங்கத்தில் இணைந்தவர்களை துணை ஆளுநர் அறிவழகன் சங்கத்தில் இணைத்து வைத்து பேசினார். சங்கத்தின் சார்பில் போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற 18 பள்ளிகளை சேர்ந்த 92-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் துணை ஆளுநர்கள் துரைராஜூ, செந்தில், முன்னாள் தலைவர்கள் கேடிலியப்பன், கருணாநிதி, சுப்பிரமணியன், சந்திரகாந்தன், சிவகுமார், ரமேஷ்குமார், உமாமகேஸ்வரன், கருணாநிதி, புயல்குமார் மற்றும் சங்க இயக்குனா்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.