பழனியில் ரோப்கார் சேவை பாதிப்பு

பழனியில் காற்றின் வேகம் அதிகரித்ததால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-20 19:00 GMT

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதானமாக உள்ளது. இதன் வழியே நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதிகமாக செல்கின்றனர். அதேவேளையில் விரைவாகவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமின்றி சென்று வரவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவை உள்ளன. இதில் ரோப்கார் சேவை கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் இயக்கப்படுவதால், காற்று பலமாக வீசினால் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று பகல் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டது. அதன்படி மதியம் 12 முதல் ஒரு மணி நேரம் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் நிலையாக இயக்கப்படவில்லை. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் மூலமாகவும் மலைக்கோவில் சென்று தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்