அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரோப் கார்

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்

Update: 2022-06-01 14:31 GMT

துடியலூர்

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அனுவாவி சுப்பிரமணியசுவாமி

கோவையை அடுத்த பெரியதடாகம் அருகே அனுவாவி சுப்பிர மணியசுவாமி கோவில் உள்ளது. தரையில் இருந்து 300 அடி உயரத்தில் மலை மேல் உள்ள சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்ய 500 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். ஆனாலும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் கார்த்திகை, சஷ்டி உத்திரம், பங்குனி, உத்தி ரம், தைப்பூசம், ஆனி உத்திரம், சித்திரை திருநாள், அனுமன் ஜெயந்தி, சிவராத்திரி போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ரோப்கார் வசதி

அனுவாவி கோவிலில் அதிக படிக்கட்டுகள் இருப்பதால் பெண் கள், முதியவர்கள், சிறுவர், சிறுமிகள் படியேறி செல்ல சிரமப்ப டும் நிலை உள்ளது. எனவே அங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப்கார் அமைக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் இந்து சமயஅறநிலை துறை அமைச்சர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து இந்து சமயஅறநிலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வல்லுனர் குழு ஆய்வு

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10 கோடி மதிப் பில் ரோப்கார் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், அறங்காவலர், அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவினர் கடந்த சில நாட்களாக கோவிலில் ரோப் கார் வசதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்குள்ள புவியியல் அமைப்பு, கம்பங்கள் அமைப்பது, வன விலங்குகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்க ளை ஆய்வு செய்தனர். இது தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்