"நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது"-காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

"நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது"-காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

Update: 2022-08-27 20:40 GMT

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவினை கல்லூரி செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்தார். விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் கலந்துகொண்டு 128 மாணவர்களுக்கு முதுநிலை பட்டங்களையும், 919 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டங்களையும் வழங்கினார்.

மேலும் அவர் 48 பட்டதாரிகளுக்கு தரவரிசை பதக்கமும் வழங்கி பேசியதாவது, உலக நாடுகளில் இளைஞர்களை அதிகமாக கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தை வகிக்கிறது. இளைஞர்கள் தங்களது குறிக்கோள்களை அடைய நினைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது. இளைஞர்கள் தாம் பெற்ற கல்வி அறிவை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சிந்தித்து பயன்படுத்த வேண்டும். பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஊடகவியல், எந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதாரம், கணினி நிரல்கள் மற்றும் வங்கி ஆகியவற்றின் நிதி ஆதாரங்களை செயல்படுத்த உதவும் துறை ஆகியவற்றில் தங்களது தனித்திறமைகளை மாணவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ராஜகோபால், துணைத்தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திர பாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்