மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பகவதி (வயது 75). இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் உறவினர் போல் நாடகமாடி கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார். பின்னர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்செயினை பார்த்துவிட்டு தருவதாக கூறியுள்ளார். இவரின் பேச்சை நம்பிய மூதாட்டி தங்க செயினை கொடுத்துள்ளார். கையில் செயினை வாங்கியதும் மர்ம நபர் வீட்டு வாசலில் தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்சாமி, காவலர் கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தி பொன்னியேந்தல் அருகில் உள்ள பள்ளபச்சேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த மர்ம நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.