பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-11 20:52 GMT


மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 32). சம்பவத்தன்று இவர், மகனுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், சுஜித்ரா அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்