"அரசு காப்பீட்டுத் திட்டத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-05 23:03 GMT

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் குறைந்த செலவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, விரைவாக குணமடைதல், குறைவான நாட்கள் மருத்துவமனையில் தங்குதல் உள்ளிட்டவை ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் சிறப்புகளாக கூறப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்