புனித சவேரியார் குருசடியில் காணிக்கை பெட்டி கொள்ளை
களியக்காவிளை அருகே புனித சவேரியார் ஆலய குருசடியில் காணிக்கை பெட்டியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே புனித சவேரியார் ஆலய குருசடியில் காணிக்கை பெட்டியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.
சவேரியார் குருசடி
களியக்காவிளை அருகே மெதுகும்மல் வாறுதட்டுவில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்தில் குருசடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்துக்கு வரும் மக்கள் இந்த குருசடிக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக குருசடியில் உள்ள மாதா சொரூபத்தின் அருகில் காணிக்கை பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் காணிக்கை பெட்டியை ஆலய நிர்வாகம் திறந்து பணத்தை எடுத்திருந்தது. அதன்பிறகு காணிக்கை பெட்டி திறக்கப்படவில்லை.
காணிக்கை பெட்டி கொள்ளை
இந்த குருசடியில் வாரத்தில் 3 நாட்கள் பிரார்த்தனை நடைபெறுவது வழக் கம். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பிரார்த்தனை நடந்தது. அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் குருசடிக்கு வந்த பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி ஆலய நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவம் பற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் குருசடிக்கு வந்த மர்ம நபர்கள் காணிக்கை பெட்டியுடன் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கேமரா காட்சிகள் ஆய்வு
இதுகுறித்து ஆலய நிர்வாகி சோவன் சிங் (வயது 42) களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணிக்கை பெட்டியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.