திங்கள்சந்தை,
ஆளூர் அருகே உள்ள பெரும்செல்வவிளையில் தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மர்ம நபர் கோவில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வெளியே செல்வதை அந்த பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.ஆனால் அந்த மர்மநபர் தப்பி விட்டார். பின்னர் தான் அந்த கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.