இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை

சிதம்பரம் அண்ணாமலை நகரில் இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-08-10 16:39 GMT

சிதம்பரம்

இரும்பு கடை உரிமையாளர்

சிதம்பரம், அண்ணாமலைநகர், சீனிவாசா அவன்யூ, கொத்தங்குடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் திருமாவளவன்(வயது 46). இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்(இரும்பு) கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று திருமாவளவன் தனது வீட்டை பூட்டி விட்டு காரைக்காலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு இரவு வீ்டடுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் இருந்த பீரோ கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 500 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

ஜன்னல் வழியாக

வீ்ட்டின் மாடியில் ஜன்னலில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஏ.சி. எந்திரத்தை கழற்றி வைத்துவிட்டு அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த மேற்கண்ட நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து திருமாவளவன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்