சென்னையில் பூட்டிய வீடுகளில் நகை, பணம் கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை

சென்னையில் பூட்டிய வீடுகளை குறிவைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-08 01:18 GMT

சென்னை:

சென்னை மேற்கு மாம்பலம், நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). பிளம்பிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல தொழில் சம்மந்தமாக வெளியில் சென்று விட்டார். அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு தியாகராயநகரில் வசிக்கும் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் வெங்கடேசன் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.1¾ லட்சம் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் சிவகாமி அம்மை தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (38). இவர் காரனோடையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சம்பவம்

இதேபோல் ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜூலியத் ஜெயராணி (62) என்பவர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்