மணல் குவாரி ஊழியரிடம் வழிப்பறி; 6 பேர் கைது

மணல் குவாரி ஊழியரிடம் வழிப்பறி; 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-12 19:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மணல் குவாரியில் மணல் விற்பனை செய்யப்பட்ட ரூ.9 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். மேலவெட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த மதுரை மாவட்டம், அவனியாபுரம், பெரியசாமி நகரை சேர்ந்த வல்லரசு மகன் தினேஷ்குமார் (23), பாண்டியராஜன் மகன் பாலாஜி (20), ரஞ்சித் குமார் மகன் பிரேம்குமார் (22), மூர்த்தி மகன் தண்டீஸ்மூர்த்தி (24), காவேரி நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் (20), வெள்ளக்கல் தெருவை சேர்ந்த ராஜாராம் மகன் தினேஷ்குமார் (24) உள்ளிட்ட 6 பேர் மிளகாய் பொடி தூவி பணத்ைத பறித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்