தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை
தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை போனது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையபட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்மணி (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பாா்த்த போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்மணி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.