ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் துணிகர கொள்ளை

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2022-12-30 18:46 GMT

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

தொழில் அதிபர்

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.ய்து வருகிறார்.

சம்பவத்தன்று தொழில் மூலம் கிடைத்த பணத்தை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இரவில் வெளியே சென்று விட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தார்.

துணிகர கொள்ளை

அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. எனவே இது குறித்து அண்ணாநகர் போலீசில் செல்வம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்