நல்லம்பள்ளி அருகே ஸ்டூடியோ கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

நல்லம்பள்ளி அருகே ஸ்டூடியோ கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Update: 2022-06-06 17:17 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவர் நல்லம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது சொந்த ஊரான கீழ்பூரிக்கல் கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் திருவிழா முடிந்த மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 5 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் பிரகாசம் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போட்டோ ஸ்டூடியோ நபரின் வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம கும்பல் யார் என்பது குறித்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்