ஓசூரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு

ஓசூரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு

Update: 2022-06-05 16:45 GMT

ஓசூர்:

சேலம் அழகாபுரம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் மோகன் கார்த்திக் (வயது 41). இவர் பெங்களூரு அருகே ஒயிட்பீல்டு பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த லேப்டாப், ஏர்டெல் டேட்டா கேபிள் மற்றும் சார்ஜர் ஆகியவை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்