பெண்ணிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

தூத்துக்குடியில் பெண்ணிடம் கத்திமுனையில் செல்போன் பறிப

Update: 2022-10-23 18:45 GMT

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் தனலட்சுமி (வயது 28). இவர் கடந்த 21-ந்தேதி தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தனலட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த பூல்பாண்டி மகன் யோகேஷ் குமார் (19), தாளமுத்துநகர் கணேசபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் விக்னேஷ் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து தனலட்சுமியிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யோகேஷ்குமார், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்