வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 3 பேர் கைது

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

Update: 2022-11-09 21:28 GMT

வல்லம்;

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

கத்தியால் குத்தி வழிப்பறி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் எபினேஸ்வர் (வயது 30). இவர் கடந்த மாதம் வேலை முடிந்து அவருடைய மோட்டார் சைக்கிளில் சிதம்பரப்பட்டி நோக்கி சென்றாா். ‌ புதுக்குடி அருகே சென்ற போது அவருக்கு பின் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் எபினேஸ்வரை வழிமறித்து கத்தியால் குத்தி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இதில் எபினேஸ்வர் குடல் சரிந்து படுகாயமடைந்தார். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் நேற்று செங்கிப்பட்டி போலீசார் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை கொண்டனர். பின்னர் அவர்களை செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியை சேர்ந்த சுதாகரன் (21), தஞ்சை சேப்பன நாயக்கன்வாரியை சேர்ந்த இளம்பாரதி (22), தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

மேலும் இவர்கள் கடந்த மாதம் எபினேஸ்வரை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்