சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
வால்பாைற
வால்பாறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இரவில் சுற்றித்திரிந்து வரும் ஆடு மாடு போன்ற கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது.அதில் கால்நடைகளை இரவில் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித்திறிவதற்கு விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து எழுத்துபூர்வமாக எழுதியும் வாங்கப்பட்டது.
ஆனால் மீண்டும் வால்பாறை பகுதியில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கால்நடைகளை வேட்டையாடுவதற்காக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை நிலவி வருகிறது. அதனால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுகு்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.