சாலையில் சுற்றித்திரிந்தகால்நடை உரிமையாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

போடி நகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-03-26 18:45 GMT

போடி நகராட்சியில் பஸ் நிலையம், மெயின் ரோடு, மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடு, கழுதைகள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைகளை தங்களது சொந்த இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிடிக்கப்படும் கால்நடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் கால்நடை உரிமையாளர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் தனியார் அமைப்பு மூலம், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டன. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறுகையில், போடியில் கடந்த 2 நாட்களாக 16 மாடுகள், 14 கழுதைகள், ஒரு குதிரை பிடிக்கப்பட்டன. அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்