சாலைேயாரம் தீ விபத்து

சாலைேயாரம் தீ விபத்து

Update: 2023-02-20 18:45 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே உள்ள பொன்னப்பநகர் பகுதியில் 4 வழிச்சாலையோரம் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சாலையோரம் காய்ந்து நின்ற புற்கள், பேப்பர், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றில் தீ மள...மள...வென எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவிக்கொண்டிருந்தது.

இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்