சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-16 19:11 GMT

வாலாஜா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு பல ஊர்களில் இருந்து மாணவிகள் ஆயிரக்கணக்கில் வந்து படித்து விட்டு செல்கிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாலாஜா பஸ் நிலையம் முதல் கல்லூரி வரை மாணவிகள் நடந்து செல்கின்றனர். மாணவிகள் நடந்து செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி, போலீஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்