உலர் களமாக மாறிய சாலைகள்

இடையக்கோட்டை பகுதியில் உலர்களமாக சாலைகள் மாறியதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-04-06 17:02 GMT

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது சோளம் அறுவடை பணி நடந்து வருகிறது. இதனையடுத்து சோளத்தை காய வைப்பதற்கு அப்பகுதியில் போதிய உலர் களங்கள் இல்லை. இதனால் இடையக்கோட்டை பகுதியில் உள்ள சாலைகளை விவசாயிகள் உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர்.

சோளக்கதிர்களை சாலையில் உலர்த்தும்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி விவசாயிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மொபட், மோட்டார் சைக்கிளில் செல்வோர் சோளப்பயிரில் ஏறி வழுக்கி விழுந்து காயம் அடையும் நிகழ்கவுகளும் அரங்கேறி வருகிறது. எனவே இடையக்கோட்டை பகுதியில் சோளக்கதிர்களை காய வைப்பதற்கு உலர்களங்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்