பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

சூளகிரி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-22 06:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், கிராமமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வந்தனர். இதனிடையே நேற்று சப்படி சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

தொடர்ந்து இது சம்பந்தமாக கோனேரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரிடம் போலீசார் பேசினர். அப்போது சீராக குடிநீர் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்