காரைக்குடி
காரைக்குடி அருகே வேலங்குடியில் உள்ள கோவில் திருவிழாவினையொட்டி அதில் வழிபாடு செய்வது குறித்து இரு தரப்பினர்களிடையே பிரச்சினை இருந்தது. இது குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலையினை அடையாத காரணத்தால் ஒரு தரப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். பின்னர் கோவில் வழிபாடு குறித்து இருதரப்பினர் இடையே காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.