சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்கு

தேன்கனிக்கோட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-01 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தில் உள்ள கல் குவாரிகளுக்கு லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனபால் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக அடவிசாமிபுரம், கொரட்டகிரி கிராமங்களை சேர்ந்த 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்