அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சேவியர் தாஸ், கோபி, பழனிச்சாமி, சிவாஜி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தமிழ்ச்செல்வன், நகர் அவைத்தலைவர் வி.ஆர்.பாண்டி, முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன், சிவகங்கை யூனியன் தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்பட 55 பேரை போலீசார் கைது ெசய்தனர்.

திருப்புவனம், எஸ்.புதூர்

திருப்புவனத்தில் சந்தைதிடல் பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 34 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்துக்கு எஸ்.புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி

இளையான்குடியில் பேரூர் செயலாளர் நாகூர் மீரா, ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் ஆகியோர் தலைமையில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அபுபக்கர், அப்பாஸ் அலி, சையது இப்ராஹிம், அலி அக்பர், முருகன், குமார், தாஜ் மைதீன், சிக்கந்தர், முகமது பைசல், ரபி முகமது மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல சாலைக்கிராமத்தில் ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கே.கே. ராஜா, நாகநாதன் மலைச்சாமி, பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம் குருசேகரன், ராஜ்குமார், எம்.ஆர்.ராஜா, காந்தி, விஜயரங்கன், முத்துச்சாமி, செல்வம் சுப்பிரமணிபாலா, பாஸ்கரன், பாலாஜி, முருகவேல், சங்கர், குமார், பிரேம், பீட்டர், கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்