விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ஆத்தியப்பன் (வயது 33) என்பவர் கொலை செய்யப்பட்டு உடல் சாக்கு மூடையில் கட்டப்பட்டு கட்டனார்பட்டியில் கிணற்றில் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆரோக்கியம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று ஆத்தியப்பனின் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஓ. கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆத்தியப்பன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை 3 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.