கருப்பு சட்டை அணிந்து பணியாற்றிய சாலை பணியாளர்கள்

கருப்பு சட்டை அணிந்து சாலை பணியாளர்கள் பணியாற்றினர்.

Update: 2023-01-13 18:37 GMT

தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வை காலம் கடந்து வழங்குவதை கண்டித்தும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்தவகையில் கிருஷ்ணராயபுரம் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் புலியூர்-வையம்பட்டி மாநிலச்சாலையில் செல்லாண்டிபுரம் பகுதியில் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்