சாலை பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சாலை பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-03-10 20:13 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் நெல்லை மண்டலம் சார்பில், நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர்கள் நாராயணன், பரணிதரன், பாப்புராஜ், குமார்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில செயலாளர் செய்யது யூசுப் ஜான் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், காசிராஜ், முருகன் செந்தில்வேல், கிளாட்வின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள் கடந்த 2002-2006-ம் ஆண்டு வரை பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். பணி காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை பணியாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் வரைந்து கோஷம் எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்