ரூ.4 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்
ரூ.4 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கின.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திருப்புகலூர் மேலப்பகுதி முதல் கீழஆமப்பட்டம், வவ்வாலடி, அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபிசரளா பக்கிரிசாமி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.