கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள்

கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடந்தன.

Update: 2023-04-24 19:32 GMT

கும்பகோணம்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகள் தஞ்சை பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சை நோக்கி ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்